aftercare

பின்னலம், நோய் தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு, சிகிச்சைக்குப் பின்னர் உடல் தேறவும், சகஜ வாழ்க்கைக்கு திரும்பவும் தேவைப்படும் கவனிப்பு

தமிழ் விளக்கம்

பின்னலம், நோய் தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு, சிகிச்சைக்குப் பின்னரும் உடல் தேறவும், சகஜ வாழ்க்கைக்கு திரும்பவும் தேவைப்படும் கவனிப்பு.
halfway houses: மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது /போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்கு செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள்.
quarterway houses: இடைக்காலத் தங்குமிடங்கள் போலல்லாது அதிகக் கவனிப்பும், ஆதரவும் பாதுகாப்பும் உள்ள இல்லங்கள். மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் தங்குமிடங்கள்.

English

The continuing treatment, physical maintenance, and social support of formerly hospitalized or institutionalized clients during extended convalescence or social transition back to the community. See also halfway houses and quarterway houses.