agency
சமூக சேவைக்கான நிறுவனம்
தமிழ் விளக்கம்
நிறுவனம் என்பது ஒரு நோக்கத்திற்காக, பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்ககூடியவை. மருத்துவமனை, நூலகம், பள்ளிக்கூடம், வணிகக் குழுமம், அரசு, சமயம், தொழிற்சாலை, சிறைச்சாலை, படைத்துறை, தொண்டு நிறுவனங்கள் ஆகியவை நிறுவனத்துக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். வணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு, பொதுவாக வணிக நிறுவனம் அல்லது குழுமம் (Company) என்றழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டு ஸ்தாபனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், எனப் பலவகை நிறுவனங்கள் உள்ளன. தொழில் நிறுவனம் (Business Organization) எனப்படுவது இலாபமடைவதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்பு ஆகும். இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும். தொழில் நிறுவனத்தின் அமைப்பாக்கத்திற்கு பௌதீகவளம், மனிதவளம், நிதிவளம் மற்றும் தகவல்வளம் என்பன அவசியமாகும். இவ் வளங்களினைக் கொண்டு தொழில் நிறுவனங்களானது உற்பத்தி, கொள்வனவு, விற்பனை, சேவைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
பார்க்க: Social Agency - மக்களுக்குத் தொண்டு புரியும் தொழில்முறை நிறுவனம் - agency என்ற ஆங்கில வார்த்தை நிறுவனம், முகமையகம், செயலாண்மை, ஒரு செயலைச் செய்ய உதவும் கருவி, ஒன்றின் மீதான நடவடிக்கை என்று பல பொருளைத் தருவது போல் இருந்தாலும், அது பொதுவாக குறிப்பிட்ட வரையறைக்குள் ஒரு குறிக்கோளை அடைய உதவும் வழிமுறைகளைக் குறிக்கின்றது. Social Agency என்பதை சமூக நிறுவனம் என்று மொழிபெயர்த்தாலும், அதன் உட்பொருள் சமூக சேவை நிறுவனம் அல்லது மக்களுக்குத் தொண்டு புரியும் தொழில்முறை நிறுவனம் என்ற பொருளிலே கையாளப்படுகிறது.
சமூக சேவைகளைச் செய்ய, ஒரு இயக்குனர் குழுவின் ஆதரவில் / வழிகாட்டுதலில், மனித சேவைப் பணியாளர்கள் (சமூகப்பணியாளர்கள் மற்றும் பிறர்) உதவிப் பணியாளார்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது இவர்களால் தரப்படும் வசதிகள் சமூக நிறுவனம் அல்லது சமூக சேவை நிறுவனம் என்றழைக்கப்படுகிறது. சமூக சேவை நிறுவனங்கள், குறிப்பிட்ட சமூகப் பிரச்சனைக்குள்ளானவர்களுக்கோ, இடர்ப்பாடுகளுக்குள்ளானவர்களுக்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ வரையறைக்குட்பட்ட சேவைகளை வழங்கும். கருணையுள்ளவர்களின் நிதியுதவியாலும், இரந்து பெற்ற நிதியாலும், அரசு மற்றும் பிற உதவியாலும், சேவைக்கட்டணத்தின் மூலம் பெறப்படும் நிதியாலும், அவர்களின் சேவைகளுக்கு மூன்றாம் தரப்பினர் வழங்கும் கட்டணத்தாலும் இந்த நிறுவனங்கள் தங்களுக்கான நிதியைப் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அதன் இயக்குனர் குழு அல்லது ஆட்சிக்குழுவிற்குக் கட்டுப்பட்டது. இந்த இயக்குனர்களே நிறுவனத்தின் குறிக்கோள்களை நிச்சயிக்கின்றார்கள். நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் நிச்சயிக்கப்பட்ட குறிக்கோள்களை அடையத் தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். எந்த மாதிரியான மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அவர்களின் பிரச்சனைகளை எந்த முறைகளைக் கையாண்டு தீர்க்க வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் வகுத்திருக்கும். அரசின் சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், சமுதாய மன நல மையங்கள் போன்ற அரசு அலுவலகங்களையும் தனியார் தொண்டு நிறுவனங்களையும் சமூக நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

English
See social agency.