aging out

வயதாதல், பருவமடைதல்

தமிழ் விளக்கம்

இளைஞர்கள் தங்களின் வயது காரணமாக, அதுகாறும் தங்களின் வளர்ச்சிக்கு அனுகூலமாயிருந்தவர்களிடமிருந்தோ (Foster Care), அல்லது அவர்களைப் பராமரித்துவந்த இல்லங்களிலிருந்தோ விடுவிக்கப்பட வேண்டிய நிலை. இம்மாதிரி விடுவிக்கப்படவேண்டிய இளைஞர்களை, மேலும் சிறிது காலம் பொறுப்பாக கவனித்துக் கொள்ளுமளவு குடும்பமோ, பெரியவர்களோ இல்லாத பட்சத்தில், அவர்கள் இடர் காப்பின்மைக்கு (வீடில்லாமை, வேலையின்மை, நோயுறுதல், சிறையிலடைக்கப்படுதல், நலத்திட்டங்களைச் சார்ந்திருத்தல், பாலியல் வன்முறைக்கு உள்ளாதல், உடல்ரீதியான சித்ரவதைக்கு உள்ளாதல்) உள்ளாகி நிலைகுலையும் அபாயங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் வளர்ப்புக்குழந்தைகளாக இருக்கும் 397000 பேரில், சுமார் 20000 பேர் ஒவ்வொரு ஆண்டும் பருவமடைந்து வெளியேறவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

English

The informal term used for status changes among young people who outgrow their qualification as dependents while in the responsibility of the health care and welfare system, such as foster care, juvenile detention facilities, or educational facilities. Often when such youngsters are runaway children or kidnap victims or are moving from one foster care facility to another, they “age out” and get lost. They still exist but are no longer counted, sought, or served when located and are extremely vulnerable to exploitation.