agnosia
நுண்ணுணர்விழப்பு, தூண்டல்களுக்குப் பொருள் காண இயலா நிலை
தமிழ் விளக்கம்
புலன்கள் குறைபாடில்லாதபோதும், நினைவுத் திறன் இழக்காமலிருந்தும் பொருட்களையோ, நபர்களையோ, ஒலிகளையோ, வடிவங்களையோ, வாசனையையோ உணரமுடியா நிலை. புலன்கள் மூலம் ஏற்படும் தூண்டல்களுக்குப் பொருள் காணமுடியாத நுண்ணுணர்விழப்பு. இது மூளையில் ஏற்படும் காயத்தினாலோ, நரம்புத் தொடர்பான வியாதிகளாலோ ஏற்படலாம். இந்தக்குறைபாடு பல புலனுருப்புகளை பாதிக்காமல் ஏதாவதொரு புலனுருப்பை மட்டும் பாதிக்கும் தன்மை கொண்டது.
English
The inability to comprehend familiar objects that are being perceived by the sense organs. This may be a partial or total inability to attach meaning to the input from one or more of the five senses. For example, in visual agnosia, the individual takes in all the normal light sensations in the visual field but cannot decipher or process this information to recognize or interpret what is being seen. This condition is often the result of brain damage, especially to the cortex, often the result of stroke.