AID
சர்வதேச அபிவிருத்தி நிறுவனம்
தமிழ் விளக்கம்
(அமெரிக்க அரசின்) சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பு - ஜான் எஃப் கென்னடி அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்க அரசு ஏற்படுத்தியிருந்த சர்வதேச நிவாரணத்திற்கானப் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, (அமெரிக்க அரசின்) சர்வதேச அபிவிருத்திக்கான அமைப்பு (US AID) என்ற பெயரில் ஒரே நிறுவனமாக்கப்பட்டது. தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக முனையும் மக்களுக்கும், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சுதந்திரமான, மக்களாட்சி சமூக அமைப்பில் வாழ விரும்பும் மக்களுக்கும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம். இது சுதந்திரமான நிறுவனம் என்றாலும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்கேற்ப, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் இயங்கும் நிறுவனமாகும் ,
English
Agency for International Development (AID). The U.S. government program, created in 1961 by a consolidation of other international relief organizations, that administers and coordinates economic and social welfare assistance to other nations.