Al-Anon

மது அருந்தும் பழக்கமுடையவர்களின் உறவினர்கள் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பு

தமிழ் விளக்கம்

ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கான அமைப்பு என்றால், அல் அனான் மது அருந்துபவர்களால் அவர்களது குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் அனுபவித்த இக்கட்டுகளிலிருந்து நிவாரணம் பெற வழிகாட்டும் தன்னார்வக் குழு. இது ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பை ஏற்படுத்திய பில் வில்சனின் மனைவியான ஆன்னி என்பவரால், 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

English

A voluntary self-help organization comprising primarily the relatives of alcoholics who meet regularly to give each other mutual help and to discuss ways to help solve common problems. Al-Anon is a national organization with chapters in most communities in the United States. See also support system.