Alcoholics Anonymous (AA)

மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களின் அமைப்பு

தமிழ் விளக்கம்

ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ், மது அநாமதேயர்கள், 1935 இல் வில்சன் மற்றும் பாப் ஸ்மித் என்பவர்களால் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கும் அவ்வாறு மீளவிரும்புபவர்களுக்கும் உதவி செய்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட பரஸ்பர ஐக்கியக்குழு. அமைப்பு ரீதியான அடையாளங்களை இக்குழுவினர் தவிர்த்தாலும், உலகம் முழுமையிலிருந்தும் 20 இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு, வெளி நிதியுதவி இல்லாமல், உறுப்பினர்கள் பங்களிப்புடன் செயல்படும் அமைப்பிது. மதுப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்ட பிறகு, மீண்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சூழலிலிருந்து மீளவும், மனநிலைப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும், மீண்டும் சீர்கேடடைவதைத் தடுக்கும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும், பரஸ்பர உதவி புரிந்து 'குழு-கலந்துரை' செய்யும் இந்த அமைப்பின் அணுகுமுறை மது அருந்துவோர் தமது சுயநினைவுடன் பணிபுரிய உதவுவதே, இந்த அமைப்பின் வெற்றிக்குக்குக் காரணம். இந்த அமைப்பின் பெரும்புத்தகத்தில் (The Big Book) குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு படிகள் (Twelve Step program) என்ற வழிகாட்டி முறை, 'சமயம் சாராத உள்ளொளி வளர்த்து, ஆளுமையை வலுப்படுத்தவும், இந்த அமைப்பின் பன்னிரண்டு மரபுகள் (Twelve Traditions) ஸ்திரமான மனம் பெறவும், ஐக்கிய பாவத்துடன் செயல்பட்டு தேவைற்ற வெளி விவகாரங்களில் தலையிடாதிருக்கும் மனோபாவத்தை உறுப்பினர்களுக்கு அளிக்கிறது.

English

A voluntary self-help organization of people who have experienced problems related to alcohol dependence. Founded in 1935 by two alcoholics, the organization functions through 1,000 local groups. None of these groups has formal officers, constitutions, or dues, and all groups are open to anyone with a drinking problem.