Alinsky, Saul
சால் அலின்ஸ்கி (1909-1972)
தமிழ் விளக்கம்
சால் அலின்ஸ்கி (1909-1972) - அமெரிக்காவின் போற்றத்தகுந்த சமூகச் செயல்பாட்டாளர். நவீன சமுதாய அமைப்பு முறையின் பிதாமகர் என்றும், அமெரிக்க ஜனநாயகம் மேலதிக அர்த்ததோடு செயல்பட வழிவகுத்தவர் என்றும் பாராட்டப்பட்டவர். நகர்ப்புற ஏழைகளை ஒருங்கிணைத்து இவர் நடத்திய போராட்டங்கள் அமெரிக்காவில் அதிர்வலைகளை உருவாக்கியது. மாற்று அரசியலையும், மாற்றுக் கலாச்சாரத்தையும் விரும்பிய அமெரிக்க இளைஞர்களின் ஆதர்ச புருசனாக விளங்கியவர். இவர் எழுதிய 'போராட்டக்கார்களுக்கான பள்ளி எழுச்சி' (Reveille for Radicals (1946), போராட்டக்காரர்களுக்கான விதிமுறைகள் (Rules for Radicals (1971) என்ற இருநூல்களும் சமுதாய அமைப்பாளர்களுக்கான அரிச்சுவடிக்களாகக் கருதப்படுகிறது. இவரால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைப் பகுதிகளுக்கான அறக்கட்டளை (Industrial Areas Foundation IAF- 1940) யில், பயிற்சி பெற்ற பலர் தங்கள் நாடுகளில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்தனர். அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவும், (ஹிலாரி கிளின்டன் அம்மையார் கூட) அலின்ஸ்கியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சமுதாய அமைப்பாளராகப் பணியாற்றி தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English
(1909–1972) A community organizer based in Chicago, he developed many innovative tactics and methods for effectively mobilizing a community. Author of the influential book Reveille for Radicals (1946), he advocated realistic goal setting and personalizing social problems by identifying scapegoats or “villains.”