almshouse
இரவலர் இல்லம், ஏழையர் காப்பு மனை, வறியவர் விடுதி
தமிழ் விளக்கம்
ஆதரவற்ற குடும்பங்களையும், மனிதர்களையும் சத்திரங்களிலோ, இல்லங்களிலோ வைத்துப் பராமரித்த / நிவாரணமளித்த கடந்த கால நடைமுறை. தற்போது இந்த முறை வழக்கொழிந்து வறியவர்கள் வாழுமிடங்களிலே அவர்களுக்குத் தேவையான உதவியைப் பணமாகவோ, பொருளாகவோ பிற சேவையாகவோ வழங்குகிறார்கள்.
English
A home for poor people; a form of indoor relief prevalent before the 20th century, in which shelters funded by philanthropy were provided for destitute families and individuals. In recent decades, almshouses have largely been replaced by outdoor relief programs in which needy people are provided with money, goods, and services while living in their own homes. See also relief and workhouse.