altruism

தன்னலமின்மை, பிறருக்காக வாழும்தன்மை, பொதுநலப்பண்பு, பிறர் நலன் பேணும் கொள்கை, தனக்கென வாழாது பிறர் நலம் பேணுதல், பொதுநலநெறி

தமிழ் விளக்கம்

இச்சொல் alteri என்ற அடுத்தவர்கள் என்ற பொருளுடைய இலத்தீன் வேர்ச் சொல்லிருந்து தோன்றி, பிரெஞ்சு தத்துவ ஞானியான அகஸ்ட் காம்டே (Auguste Comte) வால் அகங்காரம் (egoism) என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்லாக (altruisme) பயன்படுத்தப்பட்டு வழக்கில் வந்தது. அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொண்டு கொடுக்கப்படும் பணம், பொருள், சேவை, நட்புணர்வு போன்ற பல செயல்களைக் குறிக்கும்.

English

Unselfish regard for the well-being of others, accompanied by motivation to give money, goods, services, or companionship. See also philanthropy.