American Association for Organizing Family Social Work
குடும்பச் சமூகப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் அமெரிக்க அமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் சமூக சேவைகளைச் (தரும காரியங்களை) செய்து கொண்டிருந்த பெரும்பாலான அமைப்புகள், ஸ்திரமற்ற குடும்பங்களால்தான் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றுகின்றன என்ற அனுபவத்தின் அடிப்படையில், சமூகத் தனியாள் பணியை அணுகுமுறையாக வைத்துச் செயல்பட ஆரம்பித்தது. தருமப்பணி என்ற கருத்திலிருந்து, குடும்பச் சேவைகளுக்கான அமைப்பாகத் தங்களை மாற்றிக்கொண்டு, அதற்குப் பொருத்தமாக குடும்ப சமூகப் பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் அமெரிக்க அமைப்பு என்று பெயர் மாற்றம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு தற்போதைய வடிவத்தைப் பெற்று, தாம்பத்திய ஆலோசனை, கல்வி வழிகாட்டல், பயிற்சிகள், சமுதாய சேவைகள், குடும்ப ஸ்திரத்தன்மையை பேண தேவையான நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்கள் வகுக்க அரசுக்கு ஆலோசனை சொல்வது, ஆய்வுப்பணி, பிரசுரங்கள் வெளியிடுவது, உறுப்பினர் சங்கங்களுக்கான தர நிர்ணயம் போன்ற பல்வேறு பொறுப்புகளை எடுத்துச் செய்கிறது.
English
Family Service America (FSA). The national organization comprising privately funded, local family service organizations in most larger communities in the United States, plus professionals and private citizens interested in social services for families. Formerly known as the Family Service Association of America, FSA was established as an outgrowth of the National Association of Societies for Organizing Charities in 1911 and took its present name in 1983. Its member agencies provide family therapy and marital therapy, guidance and educational programs, and social services to the community. The national organization sets standards for member agencies, provides public relations and educational programs, and sponsors research and publications. Its board helps set policy and advise lawmakers about family needs.