American Association of Group Workers (AAGW)

சமூகக்குழுப் பணிக்கான அமெரிக்க சங்கம்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியாளர்கள் சங்கம், சமூக குழுப்பணியை பாட முறையாக முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும், தொழில் சார்ந்த செயல்முறை மேம்பாட்டிற்கும் பாடுபட 1936 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனத்துடன் (NASW) இணைக்கப்பட்டது. தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. தேசியப் பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கமாகும்.

English

An organization of professional social workers who specialized in working with small groups. AAGW was formed in 1936 and discontinued as an autonomous entity in 1955 when it merged into the then newly created National Association of Social Workers (NASW).