American Association of Medical Social Workers (AAMSW)

மருத்துவ சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க அமைப்பு

தமிழ் விளக்கம்

மருத்துவமனை சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க அமைப்பு. மருத்துவமனைகளில் பணியாற்றிய சமூகப்பணியாளர்களை ஒருங்கிணைத்து 1918 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், மருத்துவமனைகளில் பணியாற்றாத, ஆனால் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டு வந்த சமூகப்பணியாளர்களையும் உள்ளடக்கி ஏற்றுக்கொள்ளுமுகமாக 1934 ஆம் வருடம் மருத்துவ சமூகப்பணியாளர்களுக்கான அமெரிக்க அமைப்பாக பெயர் மாற்றம் பெற்றது. பின், 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம் (NASW), சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசியச் சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் மருத்துவமனை சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க சங்கமாகும்.

English

American Association of Hospital Social Workers (AAHSW). The organization, established in 1918, comprising social workers employed in medical facilities and hospital social work departments. In 1934 it was renamed the American Association of Medical Social Workers (AAMSW) to reflect its growing membership of workers employed in nonhospital medical facilities. In 1955 it merged with six other professional groups to form the National Association of Social Workers (NASW).