American Board of Psychiatry and Neurology (ABPN)
மனநோயியல் மற்றும் நரம்பியல் கல்விக்கான சான்றளிக்கும் சபை, மனநோயியல் மற்றும் நரம்பியலுக்கான அமெரிக்க வாரியம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் உளப்பிணி மற்றும் நரம்பியல் மருத்துவராகப் பணியாற்ற உரிமம் வழங்கும் தொழில்முறை ஒழுங்காற்று வாரியமான இவ்வமைப்பு, 1934 ஆம் ஆண்டு, அமெரிக்க உளப்பிணி மருத்துவர்கள் சங்கம், அமெரிக்க நரம்பியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் அமெரிக்க மருத்துவர்கள் சங்கத்தின் உட்பிரிவான நரம்பு மற்றும் மனவியாதிகளுக்கான பிரிவு ஆகிய மூன்று அமைப்புகளின் கூட்டிணைவு ஆகும். பல்வேறு மருத்துவர்களுக்கான உரிமம் வழங்கும் 24 அமெரிக்க அமைப்புகளில் மனநோயியல் மற்றும் நரம்பியலுக்கான அமெரிக்க வாரியமும் ஒன்று.
English
An organization of physicians established in 1934 that examines and certifies diplomates in psychiatry, neurology, and related fields of medical practice. A “board-certified” psychiatrist or neurologist is credentialed by this group.