American Federation of State, County, and Municipal Employees (AFSCME)
மாநில, உள்ளாட்சி அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு.
தமிழ் விளக்கம்
இது வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்க மைய அரசுப் பணியல்லாத, மாநிலம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான, 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகப்பணியாளர்கள். இவர்கள் மாநில மற்றும் உள்ளாட்சி மன்றங்களால் செயல்படுத்தப்படும் சமூகநலத் திட்டங்களில் பணியாற்றுபவர்கள். இவர்கள் தவிர காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொது நிர்வாகப் பணியாளர்களும் இத்தொழிற்சங்கத்தில் உறுப்பினர்கள்.
English
A labor organization founded in 1936, with headquarters in Washington, DC, and chapters throughout the nation, whose members are employed by nonfederal governments. Many of its members include state and county public assistance workers, child welfare workers, and other social services personnel. Other membership groups include police personnel, firefighters, and public agency administrators.