Americorps

அமெரிக்கத் தொண்டரணி

தமிழ் விளக்கம்

ஏழைகள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களுக்குச் சேவைபுரிய கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, 1994 இல் ஏற்படுத்தப்பட்ட தொண்டர் படை. இத்தொண்டர்களுக்குப் பயிற்சியளித்து கிராம மற்றும் நகர்ப்புறங்களில், அமெரிக்க இந்தியர்கள் பயிலும் கல்வி நிலையங்களில், குறிப்பிட்ட இலக்கு மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலத்திட்ட சேவைகள் வழங்கப்பட்டது. இத்தொண்டர்களின் சேவைக்குப் பிரதியுபகாரமாக கல்வியும் பயிற்சியும் பிற சலுகைகளும் வழங்கப்பட்டது.

English

A U.S. government program of the Clinton administration established in 1994 to help administer, finance, and train volunteers to provide health, education, vocational, economic development, or social services for designated groups. Most of the work occurs in poor urban or rural areas, American Indian reservations, and institutions. Americorps volunteers may recieve educational and other benefits.