amnesia

மறதி நோய், பழைய நினைவுகளை மறத்தல், நினைவுத் திறன் இழப்பு

தமிழ் விளக்கம்

உணர்வெழுச்சிகளாலோ அல்லது உடல் கோளாறுகளாலோ அல்லது போதைப் பழக்கத்தாலோ ஏற்படும் ஞாபக மறதி / நினைவிழப்பு. இது முழுமையாக எல்லாவற்றையும் நினைவிழப்பதாகவோ அல்லது குறிப்பிட்ட கால நினைவுகளை இழப்பதாகவோ அமையலாம். இது இரு வகைப்படும். 1.கடந்த கால நினைவுகளை மறக்கும் பின்னோக்கிய மறதி (Retrograde amnesia), 2. நிகழ்காலச் சம்பவங்களை எதிர்கால உபயோகத்திற்கு தேக்கி வைக்க இயலாத முன்னோக்கிய மறதி (Anterograde amnesia).

English

Inability to recall some or all past experience as a result of emotional or organic factors, or combinations of both. See retrograde amnesia and anterograde amnesia. See also psychogenic amnesia.