amok
வெறி கொள்ளல், பித்துப்பிடித்தல்
தமிழ் விளக்கம்
இது மலேசியா போன்ற நாடுகளில் தென்படும் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மனநோய். தாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம் என்று கருதுபவர்கள், அந்த அவமானத்தை மனதில் அடைகாக்க அது வஞ்சினமாக, வன்முறையாக, கொலையில் முடியும். இந்த அறிகுறி பெரும்பாலும் ஆண்களிடத்திலே காணப்படுகின்றது. இம்மனக் கோளாறு உள்ளவர்கள் தாங்கள் அடக்கப்படுகிறோம் என்ற உணர்வோடும், ஞாபகமறதியோடும், மிகுந்த சோர்வோடும் காணப்படுவர்.
English
A culture-bound syndrome, found originally in Malaysia, characterized by a person's period of brooding, followed by violent or homicidal outbursts. It is found mostly in males and often follows perceived insults. It is often accompanied by delusions of persecution, amnesia, and exhaustion.