anabolic steroids
வளர்வினை ஊக்கி, உயிர்ப்பொருள் கட்டமைப்பு ஊக்கி
தமிழ் விளக்கம்
ஸ்டீராய்டு நம் உடலிலுள்ள ஹார்மோன் வகையைச் சேர்ந்தவை. அனபோலிக் ஸ்டெராய்டுகள் (வளர்வினை ஊக்கிகள்) என்பது ஆண்மை இயக்குநீரின் (testosterone) பயன்களைத் தரவல்லது. இது தசைகளில் புரோட்டீன் அளவை அதிகரித்து, எலும்பு மற்றும் தசைகள் வலுவடையக் காரணமாக இருக்கின்றது. குரல் நாண்களின் வளர்ச்சிக்கும், ஆண்பால் பண்புகள் தொடர்பான அனைத்துக் குணங்களையும் வீரியம் கொள்ள வைக்கின்றது சிலவகை ஸ்டீராய்டு மருந்துகள் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கவல்லது. நோயாளிகளின் உடல் நலனில் ஏற்படும், அட்ரீனல் சுரப்பிக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த மருந்து அவசியம்.
பார்க்க: Steroids - இயற்கையான இயக்கு நீர்களாலோ அல்லது செயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டோ மூட்டுவலி, கீழ்வாதம், சுவாச காசம் (asthma) போன்ற நோய்களுக்கும், வலியைப் போக்கும் வலிநீக்கியாகவும், காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சலடக்கியாகவும், அழற்சியைக் கட்டுப்படுத்தாவும் உபயோகப்படுத்தப்படும் மருந்து. இது வலியைப் போக்குவதுடனில்லாமல், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுவதால், விளையாட்டு வீரர்களாலும், உடற்கட்டு பயிற்சியாளர்களாலும், அதிக தசைத்திறல் கொண்டு உடல் எடை கூட்ட விரும்புவார்களாலும் அதன் நீண்டகாலப் பயன்பாட்டினால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வளர்ச்சி ஊக்கியக்க பயன்படும் இம்மருந்து காலப்போக்கில் ஆற்றலைக் குறைத்து, மன அழுத்தத்தை உண்டாக்கி, கல்லீரல் தொடர்பான சீர்கேடுகளை உருவாக்கி நல்வாழ்வைக் கெடுக்கும.

English
See steroids.