anal character

ஆசனவாய்ப் பருவ மனநிலை / ஆளுமை, சுலபத்தில் திருப்தியடையாத, கஞ்சத்தனமான

தமிழ் விளக்கம்

சிக்மண்ட் பிராய்டின் உள பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி குத பருவம் (Anal Stage) என்பது 1.5 வயதிலிருந்து 3 வயதிற்குட்பட்ட வாழ்க்கைப் பருவம். பிராய்டின் கருத்துப்படி மனித வளர்ச்சிப்பருவங்கள் ஒவ்வொரு பருவத்திற்குரிய உணர்வுமிக்க உடற்பகுதிகளை (erozenous zones) அடிப்படையாகக் கொண்டது. குதப்பருவத்தில் சிறுநீர்ப்பை மற்றும் குடலியக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்பருவத்தில் குழந்தைகளுக்குக் கழிப்பறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சியினால் கச்சிதத் தன்மை, கஞ்சத்தனம், சுய ஒழுக்கம், சண்டித்தனம், பகட்டுத்தனம் போன்ற ஆளுமைப் பண்புகள் வளர, அதுவே வயது வந்தபின்னும் நீடிக்கின்றது.

English

See “anal personality”.