anal personality
ஆசன வாய்ப் பருவ ஆளுமை
தமிழ் விளக்கம்
ஆசன வாய்ப் பருவ (1.5 - 3 வயது) ஆளுமை - உள பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, 1.5 -3 வயதிற்குள் குழந்தைகளுக்குக் கழிப்பறைப் பயிற்சி தரும் பெற்றோர்கள், மல ஜலம் கழிக்கும் செயல்களில் காட்டும் கறார்த் தன்மையிலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடங்கள் அவர்கள் வயதான பின்பு அவர்களின் ஆளுமையாக உருவெடுக்கின்றதென்ற கோட்பாடு. மிதமிஞ்சிய, பிறருக்கு எரிச்சலூட்டும் நாசூக்குத்தனம், எதிலும் திருப்தியடையாத தன்மை, கஞ்சத்தனம், ஒழுங்கு முறையாக்கத்தின் மீது மிகை விருப்பம் போன்ற குணங்கள் குதப்பருவ ஆளுமைத் தன்மை என்றழைக்கப்படுகிறது.
English
A descriptive term from psychoanalytic theory, referring to an individual who is excessively fastidious, miserly, rigid, and compulsively obsessed with orderliness; also known as “anal character.”