analyst
பகுத்தாய்பவர், உளநிலைப் பகுப்பாய்பவர்
தமிழ் விளக்கம்
பிராய்டாலும் அவரைப் பின்பற்றியவர்களாலும் பிரேரிக்கப்பட்ட உளப்பாலியல் அபிவிருத்திக் கோட்பாடு, ஆளுமை அமைப்புக் கோட்பாடு, அவர்களால் கையாளப்பட்ட உளப்பிணி சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துபவர்கள் உளப்பகுப்பாய்வாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். மனநல மருத்துவர்களே பெரும்பாலும் உளப்பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தினாலும், தனிமனித உளப்பகுப்பாய்வில் சிறப்புப் பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்களும், பிற மனநலப் பணியாளர்களும் உளப்பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்துகின்றனர். உளப்பகுப்பாய்வு முறையைப் பின்பற்றுபவர்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து அமர்வுகளாகத் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் சந்திக்கிறார்கள். உளப்பகுப்பாய்விற்கென்று வடிமைக்கப்பட்ட சிறப்புப் படுக்கையில் நோயாளிகளைப் படுக்கவைத்து, அவர்களை மனம் போன போக்கில் பேச விட்டு, அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அதனுள் உள்ளடங்கியிருக்கும் ஆழ்மன இச்சைகள் மற்றும் அவர்களால் கையாளப்படும் ஆரோக்கியமற்ற உளப்பாதுகாப்பு முறைகளையும் (defense mechanisms), அவர்களின் கனவுகள் வெளிப்படுத்தும் ஆழ்மன அர்த்தங்களையும் கண்டறிந்து அதை உணர்வு நிலைக்குக் கொண்டுவந்து, ஆரோக்கியமற்ற எண்ணங்களை அகற்ற உதவுகின்றனர்.
English
See psychoanalyst.