anemia

இரத்தசோகை, குருதிச்சோகை, ரத்தமின்மை

தமிழ் விளக்கம்

உடலின் பல உறுப்புகளுக்கும் ஆக்சிஜனைச் சுமந்து செல்வது இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள்தான். அவற்றில் இருக்கும் ஹீமோகுளோபின்கள்தான் இந்தப் பணியைச் செய்கின்றன. இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது இரத்தசோகைக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால், அது உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும். ஆரோக்கியமான ஆண்களுக்கு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அளவு, 13 கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலும் இருக்க வேண்டும். ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 11 கிராம் / டெசி லிட்டரும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு 12 கிராம் / டெசி லிட்டரும் இருக்க வேண்டும். இந்த அளவைவிடக் ஹீமோகுளோபின்களின் அளவு குறையும்போது இரத்த சோகை ஏற்படுகிறது.

English

A disorder in which the blood is deficient in red cells or hemoglobin. The most apparent initial symptom is a feeling of tiredness resulting from the blood's inability to transport enough oxygen through the body.