aneurysm
இரத்த தமனி விரிவடைதல்
தமிழ் விளக்கம்
தமனிகள் (Artery) அல்லது நாடிகள் எனப்படுபவை, குருதியை இதயத்தில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்லும் குழாய்கள் ஆகும். இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் (Veins) எனப்படுகின்றன.உடலின் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் கொண்டு செல்வதிலும் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் தமனிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இறப்புக்கு முதன்மையான காரணிகள் மாரடைப்பும் (Heart Attack) பக்கவாதமும் (Stroke) ஆகும். இவை நாளடைவில் தமனிகள் விரிவடைவதாலும், பழுதடைவதாலும் ஏற்படுகின்றன. தொற்று நோய், காயம், உயர் இரத்த அழுத்தம், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றால் இரத்த நாளங்கள் விரிவடையும். பெருந்தமனி (aortic aneurysm) விரிவால் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம். மூளைத் தமனிகளின் விரிவால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளையின் செயல்கள் பாதிக்கப்படலாம்.
English
A permanent dilation of a weakened artery. Major causes of the weakening are infection, injury, hypertension, arteriosclerosis, or congenital abnormalities. The most serious and life threatening of these are the aortic aneurysm, which can result in loss of blood from the heart to the body cavities, or brain aneurysm in which the blood flow to parts of the brain can be interrupted.