anger
சினம், கோபம், சீற்றம்
தமிழ் விளக்கம்
கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலான எரிச்சல் உணர்விலிருந்து கடுமையான வெறி உணர்வு அல்லது வஞ்சினம் கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலின் (நோரட்ரினலின்) அதிகம் சுரக்கலாம். உளவியலாளர்கள் மூன்று வகையான கோபத்தைக் கண்டறிந்துள்ளனர்; 1. முதல் வடிவமான பதற்றத்துடன் கூடிய திடீர் கோபம். இது சுயப்பாதுகாப்பின் போது வெளிபடும். 2. இரண்டாவது அமைதியான உள்நோக்கத்துடன் கூடியதாகும். இது ஒருவர் தன்னை நியாயமில்லாத வகையில் நடத்தும் போது உணரப்படும். இவை இரண்டும் வந்து செல்பவை 3. மூன்றாவது எப்போதும் எரிச்சல் அல்லது கடுகடுப்பாக இருப்பது இந்த வகையின் வெளிப்பாடாகும். கோபம் உளவியல் வளங்களைத் திரட்ட, தவறான நடத்தைகளைத் திருத்தும் உறுதியை ஊக்குவிக்க, சமூக நீதியை உயர்த்த, எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய, ஒருவரைப் பொறுமையாக இருக்க வைக்க உதவக் கூடியது. ஆனால் அதுவே சரியான வடிகால் இல்லாவிடில் அழிவைத் தரக்கூடியது. கோபம் தன் வலிமையான வடிவத்தில் மனிதனின் தகவல் செயல்ப்பாட்டுத் திறன், அறிவாற்றல், நடத்தைக் கட்டுப்பாடு முதலியவற்றை முடக்கக்கூடியது. மேலும் ஒரு கோபமான மனிதன் புற உண்மை, பச்சாதாபம், விவேகம் அல்லது சிந்தனையை இழந்து மற்றவர்க்குத் தீங்கு விளைவிக்கலாம். சங்க இலக்கியத்தில் கதம், சீற்றம், சினம், வெகுளி முதலிய சொற்கள் கோபத்தை உணர்த்தும் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.
English
A common and usually normal emotion that occurs in response to an individual's perception of being threatened or harmed. Its manifestations often include irritability, physical or verbal attacks, increased heart rate and respiratory activity, and rage and negativism. Anger may be continuous or intermittent, directed inward or outward, intense or mild, and according to some psychologists, conscious or unconscious. It is considered maladaptive or pathological when it is relatively continuous or occurs even when there is no immediate catalyst.