angina pectoris
மார்பு வலி, இதயதசைகள் போதிய அளவு இரத்தம் பெறமுடியாதபோது ஏற்படும் கடுமையான மார்பு வலி
தமிழ் விளக்கம்
இதயத்தில் உள்ள கரோனரி முடியுறு தமனிகளின் (Coronary End Arteries) விட்டம் சுருங்குவதால் (பெரும்பாலும் கொழுப்பு படிவதால்) ஏற்படும் நெஞ்சுவலி 'மார்பக நெறிப்பு அல்லது 'மார்பு முடக்குவலி' எனப்படுகின்றது. இதயத்தின் வழியாகவே உடலில் உள்ள அனைத்து இரத்தமும் பாய்ந்தாலும் இதயத்தின் தேவைக்கு அதனை நேரடியாக நுகர முடியாது. கரோனரி தமனியின் வழியாக இதயமானது தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. கரோனரி தமனியின் விட்டம் சுருங்கும்பொழுது, இதயத்தின் பயன்பாட்டிற்கான இரத்தவோட்டம் குறைகிறது. இதனால் இதயத் தசையில் இரத்த நலிவு ஏற்படுகிறது. இதனைப் பொதுவாக 'ஹார்ட் அட்டாக்' என்று அழைப்பர். நாளங்களை விரிக்கச் செய்யும் மருந்துகள், நாளங்களைச் சுருங்கவிடாமல் செய்யும் உத்திகள், மற்றும் அறுவைச் சிகிச்சை மூலம் இதைக் குணப்படுத்தலாம்.
English
Sharp pains in the chest that occur when the heart muscle receives insufficient blood. Caused by sudden closure of the coronary arteries, often brought on by excitement or physical exertion, angina often is treated with drugs that dilate the blood vessels as well as with surgical procedures to remove obstructions.