anima

உள்ளடங்கிய ஆளுமைக்கூறு, மானுடப் பிறவியின் உள்ளடங்கிய உயிர்க்கூறு

தமிழ் விளக்கம்

கார்ல் யூங் கண்ட உளவியல் உண்மைகளுள் ஒன்று அனிமா மற்றும் அனிமஸ் என்பதாகும். அனிமா (anima ) என்பது ஆண் நனவிலியில் (unconscious ) இருக்கும் பெண்ணுரு. அனிமஸ் (animus ) என்பது பெண் நனவிலியில் இருக்கும் ஆணுரு. இரண்டும் இயற்கை வழி கற்பனை உருக்கள் ஆகும். அதாவது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் நடந்து வரும் உறவுகள் வழியே ஆண் மனத்தில் பெண்ணுரு, பெண் மனதில் ஆணுரு ஒரு மூலப்படிவமாக (archetype) பதிவாகி விடுகின்றது. பிறப்பிலிருந்து சில ஆண்டுகள் தம்மை மிகவும் பாத்தித்த பெண்களின் தொகுதி ஆண் மனதில் பெண்ணுருவாக பெற்றமைந்து விடுகிறது. அதேபோல் பெண் மனதில் ஆண்களின் தொகுதி ஆணுருவாகப் பெற்றமைந்து விடுகின்றது. இவற்றில் பெற்றோர், உறவினர் பெரும் பங்கு வகிப்பர். இந்த உருக்கள் பிற்காலத்தில் காதல் தேர்வின்போது (love choice ) வீரியத்தோடு செயல்படும். முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்ததும் காதல் (கண்டதும் காதல்) தோன்ற இம் மூலப்படிவங்களே காரணம். நனவிலி உருவுக்கு அதிகப் பொருத்தமான நபரைக் கண்டால் இனம் புரியாத ஈர்ப்பு அதிகமாகும். நனவிலி உருவுக்கு பொருத்தமற்ற நபர்களிடம் பெரும்பாலும் ஈர்ப்பு ஏற்படுவதில்லை.

English

In the psychoanalytic theory of Carl Jung (1875–1961), the feminine aspect of a male's personality. The male inherits this feminine archetype from the accumulated experiences of men as they have related to women through the ages.