animus
உள்தூண்டுதல், உள்ளுணர்ச்சி, செயல்நோக்கம், பகைமை நோக்கம், காழ்ப்புணர்ச்சி
தமிழ் விளக்கம்
கார்ல் யூங் கண்ட உளவியல் உண்மைகளுள் ஒன்று அனிமா மற்றும் அனிமஸ் என்பதாகும். அனிமா (anima ) என்பது ஆண் நனவிலியில் (unconscious ) இருக்கும் பெண்ணுரு. அனிமஸ் (animus ) என்பது பெண் நனவிலியில் இருக்கும் ஆணுரு. இரண்டும் இயற்கை வழி கற்பனை உருக்கள் ஆகும். அதாவது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் நடந்து வரும் உறவுகள் வழியே ஆண் மனத்தில் பெண்ணுரு, பெண் மனதில் ஆணுரு ஒரு மூலப்படிவமாக (archetype) பதிவாகி விடுகின்றது. பிறப்பிலிருந்து சில ஆண்டுகள் தம்மை மிகவும் பாத்தித்த பெண்களின் தொகுதி ஆண் மனதில் பெண்ணுருவாக பெற்றமைந்து விடுகிறது. அதேபோல் பெண் மனதில் ஆண்களின் தொகுதி ஆணுருவாகப் பெற்றமைந்து விடுகின்றது. இவற்றில் பெற்றோர், உறவினர் பெரும் பங்கு வகிப்பர். இந்த உருக்கள் பிற்காலத்தில் காதல் தேர்வின்போது (love choice ) வீரியத்தோடு செயல்படும். முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்ததும் காதல் (கண்டதும் காதல்) தோன்ற இம் மூலப்படிவங்களே காரணம். நனவிலி உருவுக்கு அதிகப் பொருத்தமான நபரைக் கண்டால் இனம் புரியாத ஈர்ப்பு அதிகமாகும்.
கார்ல் குசுத்தாவ் யுங்கு (Carl Gustav Jung 1875- 1961), சுவிசு உளநோய் மருத்துவரும் உளச்சிகிச்சையாளரும் ஆவார். இவரே பகுப்பாய்வு உளவியலைத் துவக்கியவருமாவார். இவரது கருத்தாக்கங்கள் உளவியலில் மட்டுமன்றி மெய்யியல், மானிடவியல், தொல்பொருளியல், இலக்கியம், மற்றும் சமயத் துறைகளிலும் தாக்கமேற்படுத்தி உள்ளன. பகுப்பாய்வு உளவியலின் மையக் கருத்தாக்கமாக தனித்தன்மைப் பண்பு அமைந்துள்ளது—தங்கள் தனித்தன்மையை பராமரித்துக் கொண்டே நினைவிலியுடன் நினைவு உள்ளிட்ட எதிர்ப் பண்புகளுடனான ஒன்றிணைப்பு மையமாக உள்ளது. மாந்த மேம்பாட்டின் மையச் செயற்பாடாக தனித்தன்மைப் பண்பை யுங்கு கருதினார். தற்போது நன்கு அறியப்பட்டுள்ள உளவியல் வகைப்படுத்தல், கூட்டு நனவிலி, உளவியல் பகுப்பாய்ந்த மனப்பான்மைகள், அகமுகி போன்ற உளவியல் கருத்தாக்கங்களை ஜங் உருவாக்கியுள்ளார்.

English
In the psychoanalytic theory of Carl Jung (1875-1961), the masculine aspect of a female's personality. The female inherits this masculine archetype from the accumulated experiences of women as they have related to men through the ages.