anorexia nervosa

பசியற்ற உளநோய், உடல் தோற்றம் மற்றும் பருமனாவது குறித்து கவலைகொள்ளும் இளம் பெண்களுக்கு வரும் பசியெடுக்காதிருத்தல்

தமிழ் விளக்கம்

தங்களுடைய தோற்றப் பொலிவில் அக்கறை கொண்ட பெண்கள், உடல் பருத்துவிட்டால் எங்கே தங்கள் பொலிவு சீர்குலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மிகக் குறைவாக உண்ணுவது. உடல் எடையில் 15 சதவீதத்திற்கு மேல் குறையும் போது, உடல் எடை குறைந்து, போதிய ஊட்டமின்மையால், இந்நோயுள்ள பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் உள்ளது. பசியற்ற உளநோய் என்பது ஒரு தீவிரமான மனநோய். பசியற்ற உளநோய் இளம் வெள்ளைப் பெண்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது என்று சொல்லப்பட்டபோதிலும், அது எல்லா வயதினரையும், இனங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கலாம். அனோரெக்சியா நெர்வோஸா என்னும் சொல் 1873 ஆம் ஆண்டில் இராணி விக்டோரியாவின் தனிப்பட்ட வைத்தியர்களில் ஒருவரான் சர் வில்லியம் குல் அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்தச் சொல் கிரேக்கத்தை மூலமாகக் கொண்டிருக்கிறது. ஓரெக்சிஸ் என்றால் உண்பதற்கு விருப்பமின்மை என்பதாகப் பொருள்படுகிறது.

English

An eating disorder most often encountered in girls and young women whose extended refusal to eat leads to severe weight loss, malnutrition, and cessation of menstruation. The usual medical criteria for this diagnosis include the loss of 15 percent or more of one's body weight. This life-threatening condition is related to a disturbed body image and an exaggerated fear of becoming obese. The word “anor-exia” literally means loss of appetite, although the person in this condition has not lost appetite. See also bulimia nervosa.