ANS

தானியங்கி நரம்பு மண்டலம்

தமிழ் விளக்கம்

நரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது மனிதர்களில் மற்றும் விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், உடம்பிற்கு உள்ளேயும், வெளிச் சூழலுடன் தொடர்புகொண்டு தகவல்களையும், சைகைகளையும் உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் அனுப்புவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் உயிரணுக்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் நரம்புகளாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உடம்பின் பல பாகங்களுக்கு அனுப்புவதாகவும் இருக்கின்றது. இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி, உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புத் தொகுதியானது இரு வகையான உயிரணுக்களைக் கொண்டவை. அவையாவன நியூரோன்கள் (Neurons) என்று அழைக்கப்படும் நரம்பணுக்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகளும் (glia) ஆகும். நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.

English

autonomic nervous system (ANS). That part of the nervous system that regulates the nonvolitional bodily responses such as digestion, breathing, and the rate of heartbeat and glandular secretions. See also central nervous system (CNS) and peripheral nervous system (PNS).