anterograde amnesia

முன்னோக்கிய மறதி

தமிழ் விளக்கம்

மறதி நோய் என்பதை பழைய நினைவுகளை மறத்தல் அல்லது நினைவுத் திறன் இழப்பு எனலாம். உணர்வெழுச்சிகளாலோ அல்லது உடல்கோளாறுகளாலோ அல்லது போதைப் பழக்கத்தாலோ ஏற்படும் ஞாபக மறதி / நினைவிழப்பு. இது முழுமையாக எல்லாவற்றையும் நினைவிழப்பதாகவோ அல்லது குறிப்பிட்ட கால நினைவுகளை மறப்பதாகவோ அமையலாம். இது இரு வகைப்படும். 1.கடந்த கால நினைவுகளை மறக்கும் பின்னோக்கிய மறதி (Retrograde amnesia) 2. நிகழ்காலச் சம்பவங்களை எதிர்கால உபயோகத்திற்கு தேக்கி வைக்க இயலாத முன்னோக்கிய மறதி (Anterograde amnesia).
பார்க்க: Retrograde Amnesia - பின்னோக்கிய மறதி, கடந்தகால நினைவுகளை மறத்தல்.

English

The inability to recall experiences that have occurred after a certain time, usually after some physical injury or psychic stress. See also retrograde amnesia.