antisocial personality disorder

சமூக விரோத நடத்தையால் ஏற்படும் ஆளுமைக் கோளாறு

தமிழ் விளக்கம்

இது பதினோரு வகைகளாக விளக்கப்படும் ஆளுமைக் கோளாறுகளில் ஒரு வகை. ஆளுமைக்கோளாறு என்பது ஒருவர் சார்ந்த பண்பாட்டிற்கு எதிராக ஓரளவோ அல்லது முழுமையாகவோ நடந்துகொள்ளும் முறை. மனிதர்களுடனும், அமைப்புகளுடனும் பொறுப்பற்ற முறையில் மோதல் போக்கைக் கடைபிடிக்கின்ற, மற்றவர்களுக்கு இழப்பையும், துன்பத்தையும் தருகிற மாதிரி நடந்துகொண்டு அதற்காகக் குற்ற உணர்வு கொள்ளாதிருக்கின்ற, பிறர்மேல் குற்றம் சுமத்தும் மனோபாவம் கொண்ட, பிறரிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதிருக்கின்ற, ஏமாற்றங்களின் போது பொறுமை இழக்கின்ற, மற்றும் சமூகமயமாதலில் குறைபாடு போன்றவை இந்த ஆளுமைக் கோளாறின் அடையாளம்.

English

One of the 11 types of personality disorders characterized by irresponsibility, inability to feel guilt or remorse for actions that harm others, frequent conflicts with people and social institutions, the tendency to blame others and not to learn from mistakes, low frustration tolerance, and other behaviors that indicate a deficiency in socialization. Less-precise labels psychopathic personality, psychopath, and sociopath are often used as synonyms.