anxiety
கவலை, ஏக்கம், அங்கலாய்ப்பு, மனக்கலக்கம், பற்றார்வம், நிம்மதியின்மை, தவிப்பு, பதட்டம், பரபரப்பு, உளைச்சல், மனோவிசாரம்
தமிழ் விளக்கம்
எந்த ஒரு புறக்காரணமுமின்றி அமைதியற்றிருத்தல், சஞ்சலத்துடனிருத்தல், மன இருக்கத்த்துடன் இருத்தல், ஆபத்து வரவிருப்பதாக உணர்தல் போன்ற அறிகுறிகள் விட்டுவிட்டு வரும் பட்சத்தில் அது சாதாரணப் பதட்டமாகவும், அதுவே நிரந்தரமாகும்போது, பிறருடன் இணக்கமில்லாத் தன்மையை உருவாக்கி, நலஉணர்வை சீரழித்து பதட்ட நோயாகிவிடும். தவிப்பு (Anxiety) என்பது மனதாலோ அல்லது உடலாலோ அடையும் உணர்வாகும். இது ஏதாவது ஒன்று நடக்கும் என்று எதிர்பார்க்கும் போதோ, ஏதோ ஒன்று நடக்கக்கூடாது என்று ஆவல் கொள்ளும் போதோ தோன்றும் அக்கறை அல்லது அச்சம் எனக்கூறலாம். தவிப்பு வந்து விட்டால், அது ஒருவருக்குப் பயம், கவலை, நம்பிக்கையின்மை என்று பல உணர்வுகளைத் தோற்றுவிக்கும். பயம் என்பது தவிப்பல்ல. தவிப்பினும் மேலோங்கிய உணர்வு. பயம் மனிதரை மொத்தமாக செயலிழக்கச் செய்ய இயலும் என்பதை அறிய வேண்டும்.
English
A feeling of uneasiness, tension, and sense of imminent danger. When such a feeling occurs within a person with no specific cause in the environment, it is known as free-floating anxiety. When it recurs frequently and interferes with effective living or a sense of well-being or is otherwise maladaptive, it is known as anxiety disorder.