anxiety disorder

கவலையால் உருவான உளக்கோளாறு

தமிழ் விளக்கம்

எந்தக் காரணமுமன்றி எப்பொழுதும் மன இறுக்கத்துடனும், கவலையுடனும், பயத்துடனும் இருக்கும் நோய் கொண்ட மனநிலை. இந்தப் பதட்டநோய் பலவகைப்படும். தீராக்கவலை, பறவாதித்தனம் பதறி உதறிக் கலக்கமுறல், பயத்துடன் இணைந்த அச்ச உணர்வு, ஆபத்தை எதிர்கொண்டபின் வரும் பதட்டம் என்று பலவகைப்படும், 'பதட்டம்' (anxiety)) என்பது ஒருவித மனநோயாகும். இது குழப்பம், நெருக்கடி, களைப்பு, பயம், மனச்சோர்வு, மகிழ்ச்சியற்ற நிலை, அதிகாரமற்ற நிலை, மனச்சங்கடம், சிக்கல் என பல்வேறு உணர்ச்சிகளின் தொகுப்பாகும். இந்த மனநிலையானது, பல்வேறு உடல் - மனப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் மனித செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. ஒரு காரியத்தைச் செய்துமுடிக்க முடியாதோ என்ற பய உணர்வும் பிறக்கும். பதட்டத்துக்குப் பல காரணங்கள் உண்டு என்றும், இதனால்தான் பதட்டநோய் ஏற்படுகிறது என்றும் உறுதியாகக் கூறமுடியாது என்பது உளவியல் நிபணர்களின் கருத்து.

English

A chronic or recurring state of tension, worry, fear, and uneasiness arising from unknown or unrecognized perceptions of danger or conflict. The major types of anxiety disorders include generalized anxiety disorder; acute stress disorder; obsessive–compulsive disorder; posttraumatic stress disorder (PTSD); panic disorder, with and without agoraphobia; social phobia; specific phobia; and substance-induced anxiety disorder.