APHA

அமெரிக்க பொது சுகாதார சங்கம், பொது சுகாதாரத்திற்கான அமெரிக்க அமைப்பு

தமிழ் விளக்கம்

பொது சுகாதாரத்திற்கான அமெரிக்க அமைப்பு, 1872 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, பல்துறை நிபுணர்களையும், நிறுவனங்களையும் உறுப்பினர்ர்களாகக் கொண்ட, 140 வருடப் பாரம்பரியம் மிக்கது. இந்த இயக்கம் தொற்று நோய்த் தடுப்பு, பொது சுகாதாரம், ஊட்டச் சத்து மற்றும் சுகாதாரக்கல்வி, அரசு சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற விசயங்களில் அரசின் கொள்கைகள் சரியான முறையில் வடிவமைக்கப்படவும், செயல்படுத்தப்படவும் முனைப்புடன் செயல்பட்டிருக்கின்றது. பொது சுகாதாரத் துறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொது சுகாதாரத் துறையில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், பொது சுகாதாரத்திற்காகப் பரிந்து பேசியும் (advocacy) செயலாற்றுகிறது.

English

American Public Health Association (APHA). An organization founded in 1872 to advocate for societal rather than individual responses to disease and health care. Members of APHA led the movement to prevent epidemics and to enhance the nation's sanitation, nutrition, health education, and government health programs.