apportioned tax
பங்கீடு செய்யப்பட்ட வரி, பிரித்துக்கொடுக்கப்பட்ட வரி, பகிர்ந்தளிக்கப்பட்ட வரி
தமிழ் விளக்கம்
அரசின் ஒரு அதிகார மட்டத்திலிருந்து, இன்னொரு அதிகார மட்டத்திற்கு, குறிப்பாக அதைவிடக் கீழ்நிலை அரசு அமைப்புக்களுக்கு வரி வருவாயிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் நிதி ஆதாரம். மாநில அரசு உள்ளாட்சி அமைப்புக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிதி. நகராட்சிகள் தங்கள் எல்லைகளுக்குள் இருக்கும் கல்வி வட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிதி.
English
A tax collected by one level of government whose proceeds are shared with other governmental entities. For example, a city or county government distributes some of the funds collected from property taxes to the state or to school and park districts. Or money from a state gasoline tax is apportioned to local governments for city street construction. See also revenue sharing.