appropriate technology (AT)
பொருத்தமான தொழில்நுட்பம்
தமிழ் விளக்கம்
ஒரு பூகோளப் பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார நிலைக்கேற்ப, சுற்றுச் சூழலுக்குப் பொருத்தமாகவும், அந்தப் பகுதி மக்களால் எளிதில் கையாளத்தக்கதான தொழில்நுட்பம். சூமேகேர் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட 'சிறியதே அழகு' (Small is Beautiful) என்ற கருத்தாக்கத்தின் நீட்சியாக, சமூகப் பொருளாதார, அரசியல், தொழில்நுட்பத் தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிறிய அளவிலான, பரவலாக்கப்பட்ட, கைத்தொழில் சார்ந்த, குறைந்த அளவு சக்தியை நுகர்கின்ற, சுற்றுச் சூழலைப் பாதிக்காத, உள்ளூர் மக்களால் கையாளமுடிந்த, மக்களை மையப்படுத்திய தொழில் நுட்பமே பொருத்தமான தொழில்நுட்பம் என்றழைக்கப்படுகின்றது.
English
Methods for handling environmental problems or developing resources that are suitable and efficient for people of the area given their stage of economic and social progression. For example, building a small windmill to pump water in a primitive village might be a more appropriate technology than installing a hydroelectric dam or irrigation system.