APWA

அமெரிக்கப் பொதுநலச் சங்கம்

தமிழ் விளக்கம்

சமூகநலத் துறையில் பணியாற்றுகின்ற அரசு நிர்வாகிகளுக்கென்று தனியான அமைப்பு வேண்டுமென்ற, 1929 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் கூடிய தேசிய சமூகப்பணி மாநாட்டில் சொல்லப்பட்ட கருத்திற்கேற்ப, பொதுநலத் துறை நிர்வாகிகளுக்காகவென்று ஒரு (1930) அமைப்பு துவங்கப்பட்டது. பொதுநலத் துறையின் நிர்வாக மேம்பாட்டிற்கென்று தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 1932 இல் அமெரிக்கப் பொதுநலச் சங்கமாக பெயர்மாறி, 1978 ஆம் ஆண்டு மனித சேவைகளுக்கான அமெரிக்க அமைப்பாக மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. இது சமூக நலத் திட்டங்களை அமல்படுத்தும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாக நயநேர்த்திக்காகவும், பொதுநலப் பிரச்சனைகளில் புதுமையான, ஒருங்கிணைந்த மற்றும் திறமையான தீர்வுகளைக் கண்டடைய ஏதுவான கொள்கைகளை வடிவமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகின்றது.

English

American Public Welfare Association (APWA). A voluntary association of individuals and social agencies interested in maintaining effective administration and improved delivery of publicly funded human services. Founded in 1930, it includes more than 1,200 local, state, and federal public welfare organizations.