arousal

உணர்வெழுச்சி, தூண்டுதல், கிளர்ச்சி, சூடேற்றல்

தமிழ் விளக்கம்

1.சமுதாய அமைப்புப் பணிகளில் ஒருசெயலைச் செய்ய உற்சாகமாகக் கிளர்ந்தெழுவது. மக்களிடம் ஒரு பிரச்சனையின் தன்மையை எடுத்துரைத்து அதற்கான தீர்வை அடைய அவர்களைத் தூண்டுவது 2. உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தூண்டி சம்போகத்திற்குச் (பாலுறவு) சம்மதிக்க வைப்பது. புணர்ச்சியின் போது அடையாளப்படுத்தப்பட்ட நான்கு நிலைகளில் 1.உணர்ச்சியூக்க நிலை 2. புணர்ச்சியில் நிலைபெறல், 3. பாலின்பப் பரவசம், 4. தளர்வு நிலை போன்ற நிலைகளில், arousal என்பது முதல் நிலை. இந்த நிலையில் பெண்ணுருப்பைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இதயத்துடிப்பு அதிகமாகி தோல் வெளிறும்.

English

1. A state of becoming excited into action. Social workers involved in community organization sometimes seek to provoke arousal in client groups by making them aware of a relevant problem and its potential solution. 2. In human sexuality, the term refers to physiological and psychological changes in response to stimulation and leading to preparation for sexual intercourse. Sexologists William Masters and Virginia Johnson described arousal as occurring primarily in the first of the four stages of sexual response (excitement, plateau, orgasm, and resolution). They indicated that arousal begins in the excitement phase, in which vasocongestion (swelling of the blood vessels) commences, the heart and pulse rates increase, and the skin becomes flushed.