art therapy
கலைகள் மற்றும் கைவினைகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக தரப்படும் உளச்சிகிச்சை, ஒவியங்கள், சிற்பங்களைக் காணுதல் மூலமாக உணர்வுகளை வெளிக்கொணரும் உளவியல் சிகிச்சை முறைகள், கலை உளவியல் சிகிச்சை முறைகள்
தமிழ் விளக்கம்
இச்சிகிச்சை முறை சமூகக் குழுப்பணியிலும், உளப்பிணி சிகிச்சையிலும் மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களிடம் கையாளப்படுகின்றது. சில நேரங்களில் ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சியின் பொருட்டும் இம்முறை கையாளப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களை, படைப்புகளை உருவாக்க வைத்து, அது வாடிக்கையாளர்களின் உள்ளத்தை எப்படிப் பிரதிபலிக்கின்றது என்பதை உளப்பிணி சிகிச்சையாளர் மதிப்பீடு செய்து விளக்குவார். சிலநேரங்களில் பிறருடைய படைப்புகளை வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்யத் தூண்டி, அவர்களின் மதிப்பீடு அவர்களின் உளப்பாங்கை எப்படிப் பிரதிபலிக்கின்றது என்பதை சிகிச்சையாளர் விளக்குவார்.
English
The use of paintings, sculpture, and other creative expressions in the treatment of people with emotional problems. Art therapy is often used in social group work and in group psychotherapy. Often used with institutionalized people or inpatients, it is also considered to be effective with healthy people who wish to share art as a means of enhancing personal growth and development. In some forms of art therapy, clients create their own works and discuss the results with the therapist or with other members of an art therapy group. In other forms, the clients are exposed to works of art by a variety of artists and asked to assess how the works affect their own feelings and understandings. See also bibliotherapy.