artificial insemination
செயற்கை முறையில் கருவூட்டல்
தமிழ் விளக்கம்
மனிதரில் பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும். அந்தக் கருமுட்டைகள் கருவுறத் தேவையான ஆணினது விந்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில், அம்முட்டைகளுடன் கருவறைச் சுவர்களும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இச்செயற்பாடே மாதவிடாய் எனப்படுகிறது. மாறாக ஆண் பெண் கலவியினால் சினை முட்டையுடன் ஆணின் விந்து இணையுமாயின் அங்கு கருத்தரிப்பு நடைபெறுகிறது. ஆண் பெண் கலவியற்ற செயற்கை முறையாலும், பெண் கருத்தரிக்க முடியும். இதில் செயற்கையான முறையில் கணவரின் விந்தையோ, தானமாகப் பெற்ற விந்தையோ பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் உட்செலுத்தி கருவுறச் செய்யும் முறையாகும். ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் (IVF - In vitro fe rtilization) என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கைக் கலமுறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும். இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாகி, அப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாகச் சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். இம்முறையால் பிறக்கும் குழந்தையைப் பேச்சு வழக்கில் 'சோதனைக் குழாய்க் குழந்தை (Test tube baby)' என அழைப்பார்கள்.
English
The joining of sperm and ovum for the purpose of reproduction by means other than sexual intercourse or natural conception. Using surgical instruments, the physician implants semen taken from the woman's husband, or sometimes from an anonymous donor, into a fallopian tube or into the uterus, where sperm can form a union with the ovum. See also in vitro fertilization, reproductive technology, and surrogacy.