asocial behavior

கூடிவாழ விரும்பாத, சக மனிதர்களுடன் / மன்னாயத்துடன் பழகுவதில் விருப்பமில்லாத, தன்மையத் தன்மை கொண்டவர்கள்

தமிழ் விளக்கம்

தனித்திருப்பதில் விருப்பமும், சமூகத்தொடர்புகளில் அக்கறை இல்லாமலும் இருப்பவர்கள். இவர்கள் சமூக விரோத நடத்தை கொண்டவர்களைப்போல் சக மனிதர்களைத் துன்புறுத்துபவர்களல்ல. இவர்களில் பெரும்பாலோர் அகநோக்குடையவர்களாக (introvert) இருப்பார்கள். இது சமூகத்திற்கு எதிரான நடத்தை அல்ல. இருப்பினும் சமூக நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு தனித்திருப்பவர்களும் உண்டு. மதம் சார்ந்த மடாலயங்களில் இது மிகவும் விரும்பப்படும் நடத்தையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

English

Behavior characterized by indifference to people or social norms.