assimilation
பெரும்பான்மையினரின் கலாச்சாரக் கூறுகளை தன்வயமாக்கிக் கொள்ளல், தன்வயமாதல்
தமிழ் விளக்கம்
1. ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவின் குடிவழக்குகள் (folkways), மதிப்பீடுகள், மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து தன்வயமாக்கிக்கொள்வது. ஒரு தேசத்திலிருந்து / இடத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு / இடத்திற்குப் புலம் பெயர்ந்தவர்கள், அவர்கள் வாழும் நாட்டின் / இடத்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது 2. ஜீன் பியாஜியோவின் அறிதல் திறன் கோட்பாட்டின்படி குழந்தைகள் தங்கள் சூழலில் காணும் பல கூறுகளைத் தங்கள் சிந்தனையில் இயல்பாக உள்வாங்கிக்கொள்வது.
English
1. The social integration or adoption of one group's values, norms, and folkways by another group. For example, a group of immigrants may eventually integrate with or adopt many aspects of the culture of their new society. 2. In Piagetian theory, the individual's act of incorporating an aspect of his or her environment into an existing thought structure. See also culture shock.