Association for Improving the Condition of the Poor (AICP)
ஏழைகள் / வறியவர் மேம்பாட்டு சங்கம், நன்னடத்தை, சுயகட்டுப்பாடு மூலமாக ஏழைகளை மேம்படுத்தும் சங்கம்
தமிழ் விளக்கம்
வறியவர் என்று அடையாளப்படுத்த அருகதையுள்ளவர்களின் வறுமையைப் போக்கவும், அவர்களின் தார்மீக மேம்பாட்டிற்கு உதவவும், 1843 ஆம் ஆண்டு ராபர்ட் எம் ஹார்ட்லி என்பவரால் ஆரம்பிக்கப்ப்ட்ட தொண்டுநிறுவனம். ஒருவரின் வறுமைக்கும் அவரின் நல்லொழுக்கத்திற்கும் தொடர்புகள் இருப்பதால், இந் நிறுவனத்தின் தொண்டர்கள் ஏழைகளிடம் மது தவிர்த்தல், சுய கட்டுப்பாடு, இச்சையடக்கம், கடின உழைப்பில் நம்பிக்கை போன்ற பண்புகளைப் போதித்தனர். இந்த நிறுவனத்தின் செயல்முறைகளைத்தான், பின்னாளில் ஆரம்பிக்கப்பட்ட, சமூகப்பணிக் கல்வியின் தோற்றத்திற்கு வித்திட்ட அறக்கட்டளைச் சங்கங்கள் (Charity Organization Societies (COS) பின்பற்ற ஆரம்பித்தன. இந்த நிறுவனத்தின் தொண்டர்களின் பணிமுறையிலிருந்தே நட்பார்ந்த வருகையினர் (Friendly Visitors) என்ற சமூகப்பணி முன்னோடிகள் உருவானார்கள்.
பார்க்க: AICP -
பார்க்க: AICP -
English
An organization founded in New York by Robert M. Hartley in 1843 to combat poverty primarily through “character-building” activities. Volunteers tried to get poor people to abstain from alcohol, become more self-disciplined, and acquire the work ethic. Many of the methods and goals of AICP were later adopted by some Charity Organization Societies (COS) and by friendly visitors.