at-risk population

ஆபத்தான சூழ்நிலையில் வாழும் மக்கள், இடர்ப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை வாழும் மக்கள், எளிதில் இடர்ப்பாடுகளுக்குள்ளாகும் மக்கள்

தமிழ் விளக்கம்

ஆரோக்கிய ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ, சுற்றுச் சூழல் காரணமாகவோ எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் தன்மையுள்ள மக்கள். மக்களை சமூகம், அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பின்னணியில் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகுபவர்கள் என்று வகைப்படுத்தலாம். பருத்த உடம்பினருக்கும், புகை பிடிப்போருக்கும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதும். மது அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிறவிக்கோளாறுகள் வர சாத்தியமூண்டு என்பதும் ஜனரஞ்சகமான உதாரணங்கள்.

English

Those members of a group who are vulnerable to, or likely to be harmed by, a specific medical, social, or environmental circumstance. For example, overweight people or smokers are an at-risk population because they are more likely to have heart attacks or cardiovascular problems. Infants born to women who drank alcohol heavily while pregnant constitute a population at risk for birth defects. This term is roughly synonymous with vulnerable populations.