attachment theory
குழந்தைகள் தங்களை எப்படி மற்றவர்களுடன் பிணைத்துக் கொள்கிறது என்பதை விளக்கும் கோட்பாடு
தமிழ் விளக்கம்
குழந்தைப் பருவத்தில் சமூகத்தொடர்புகள் எப்படி உருவாகி, படிப்படியாக வளர்ந்து, அதன் பின்னாளைய ஆளுமையில் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விளக்கும் மேரி ஐன்ஸ்வொர்த் (M. Ainsworth) மற்றும் ஜெ பவுல்பி (J. Bowlby) என்ற ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்த கோட்பாடு. குழந்தைகளின் சமூக பந்தம் நான்கு நிலைகளில் நடக்கிறது. 1. பிறந்ததிலிருந்து மூன்று மாதம் வரை, தாயின் முலையை உறிஞ்சுதல், அவரைப் பற்றிக்கொள்ளல், அவருடைய நடமாட்டத்தைக் கண்காணித்தல், அவரை அரவணைத்துக் கொள்ளும் நிலை 2. மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை தனக்குப் பரிச்சயமானவர்களிடம் சுக உணர்வும், அன்னியர்களிடத்தில் பதட்டமும் கொள்ளும் நிலை 3. ஆறு மாதத்திலிருந்து நடை பழகும் வரை தனக்குப் பரிச்சயமான பொருட்களுடன் பந்தமும், அது இல்லாத போது பதட்டமும் அடையும் நிலை. 4. பிந்தைய பருவங்களில் தனக்குப் பரிச்சயமான / விருப்பமான பொருட்களையோ/ மனிதர்களையோ தனக்கு நெருக்கமாக வைத்துக்கொள்வது எப்படி என்று உணர்ந்து செயல்படும் நிலை. இதில் மூன்று பொதுவான தன்மைகள் காணப்படுகின்றன. 1. பாதுகாப்பான பந்தம், 2. தவிர்க்கும் பந்தம், 3. பந்தம் நிலைபெறச் செய்யும் முயற்சி.
English
A group of concepts developed in the 1970s by developmental researchers C. Ainsworth, N. Bowlby, and others about the stages through which young children progress in their development of social relationships and the influence of this development on personality characteristics in later life. In four sequential stages toward social attachment, the healthy young child exhibits characteristic behaviors: at birth to age three months, the infant maintains closeness with the caregiver through sucking, grasping, visual tracking, and cuddling. From age three to six months, the infant becomes more responsive to familiar people and discomforted by others (stranger anxiety). At age six months to toddler age, the infant seeks contact and closeness with the object of attachment and experiences discomfort (separation anxiety disorder of childhood) when the object is missing. Beyond toddler age, the child uses an increasing variety of behaviors to influence the actions of the object of attachment to meet the child's needs for closeness. In this development, three general patterns of attachment occur: secure attachment, avoidant attachment, and resistant attachment.