attending

பங்கேற்றல், உடனிருந்து உதவுதல், உரையாடலின் போது உற்றுக் கவனித்தல்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியில் தொழில்முறை சார்ந்த நேர்காணலின் போது, வாடிக்கையாளர் பேசும் போது கவனத்துடன் கேட்பது, அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பதாக உடல்மொழியாலோ, வார்த்தைகளாலோ உணர்த்துவது, கண்களைப் பார்த்துப் பேசுவது, ஆசுவாசத்துடன் அமர்ந்து கேட்பது போன்ற செயல்கள். நேர்முக உரையாடலில் வாடிக்கையாளர் உரையாடும்போது கொட்டாவிவிடுவது, பராக்குப் பார்ப்பது, பதட்டமாக உட்கார்ந்திருப்பது, கடிகாரத்தில் அடிக்கடி நேரம் பார்ப்பது போன்ற காரியங்களைச் செய்யலாகாது.

English

In social work and other professional interviews, maintaining attentiveness expressed through appropriate verbal following, eye contact, mindful but relaxed posture, and disciplined attention. A nonattending interviewer might be staring out a window or glancing at a clock, yawning, or generally showing lack of focus on the relationship process. See also following responses.