attention-deficit hyperactivity disorder (ADHD)

மிகையிக்கக் கவனக் குறைவு சீர்கேடு, அவதானக் குறை மிகையியக்க குறைபாடு, மிகை இயக்க குழந்தை நோய்க்குறி

தமிழ் விளக்கம்

அவதானக் குறை மிகையியக்கக் குறைபாடு என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்க்கும் போக்கு மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாட்டைத் தடுக்கலாம். இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு, ஏழு வயதுக்கு முன்னர், ஒரு குழந்தையிடம் தோன்றியிருக்கவேண்டும். இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை.
கவனப் பற்றாக்குறை அறிகுறிகள்
எதிலும் சிறிதுநேரம் கவனம் செலுத்தி விட்டு பின் கவனத்தைச் சிதறவிடுவது, கவனக் குறைவினால் அடிக்கடி தவறிழைப்பது, மறதிக்குள்ளாவது அல்லது எதையாவது இழந்துவிட்ட உணர்வவோடிருப்பது, தொடர் முயற்சிகள் தேவைப்படும் பணிகளை செய்ய முடியாதிருப்பது, அறிவுரைகளின் படியோ வழிகாட்டுதல்கள் படியோ நடக்க இயலாதிருப்பது, ஒன்றிற்கொன்று தொடர்பற்ற வேலைகளில் ஈடுபடுவது, தொடர்ந்து ஒரு காரியத்தில் ஈடுபட இயலாதிருப்பது
மிகை இயக்கம் மற்றும் உணர்ச்சி வசப்படல் அறிகுறிகள்
அமைதியாக ஓரிடத்தில் உட்கார இயலாமை, நெளிவது மற்றும் படபடப்புடனிருப்பது, மிகை இயக்கம், மிகைப் பேச்சு, தங்கள் முறை வரும் வரை காத்திருக்க இயலாதிருப்பது, சிந்திக்காமல் செயல்படுவது, மற்றவர்களின் உரையாடலில் இடைமறிப்பது, ஒன்றிலிருக்கும் இடர்ப்பாடுகளையோ ஆபத்தையோ உணர இயலாதிருப்பது.

English

A disorder that starts in infancy, childhood, or adolescence, characterized by impulsive behavior, inattentiveness, excessive motor activity, and short attention span. Subtypes of this disorder include “predominately inattentive type,” “predominately hyperactive–impulsive type,” and the “combined type.” The term ADHD is now used in place of several less-accurate and less-precise terms, including hyperactive child syndrome, minimal brain dysfunction, hyperkinetic reaction of childhood, and “attention deficit disorder, hyperactive type.” Apparently, in most cases, it is the result of one or more factors, including anxiety, stress, physiological disorder, neurological disorder, and some organic mental disorders.