audit
தணிக்கை, கணக்காய்வு, கணக்குத் தணிக்கை
தமிழ் விளக்கம்
தணிக்கை (audit) என்பதை ஒன்றைப் பற்றி செய்யும் மதிப்பாய்வு என்று பொதுவாகச் சொல்லலாம். தணிக்கையும், தணிக்கையாளர்களும் பலவகைப்பட்டாலும் நிதித் தணிக்கை அல்லது வரவு செலவுத் தணிக்கைதான் சாதாரண மக்களுக்குப் பரிச்சயமானது. ஒரு சமூக சேவை நிறுவனம் தனக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை எப்படிச் செலவு செய்தது என்று காட்டும் நிறுவனத்தின் கணக்குப் பதிவுகளை நிறுவனத்தின் நோக்கங்களுக்கும், விதிமுறைகளுக்கும் இணங்கச் செய்துள்ளதா என்று சரிபார்த்து மதிப்பீடு செய்து அறிக்கை வழங்குவது.
English
An inspection of the accounting records or procedures of an individual or organization to verify their accuracy and completeness. For example, the records of social agency might be audited annually by representatives of funding sources. Auditing also can involve inspecting the work done by staff, determining compliance with regulations, and completing inventories.