authoritarian
ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய, தன்னிச்சையாட்சி, யதேச்சாதிகாரம்
தமிழ் விளக்கம்
சர்வாதிகாரம் என்பது நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசு அல்லது நிர்வாக முறை ஆகும். நடைமுறையில் சர்வாதிகாரம் என்பது நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமையைக் கொண்டிருக்கும். சில அறிஞர்கள், சர்வாதிகாரம் என்பது ஆளப்படுபவர்களின் இசைவு இன்றி ஆளுவதற்கான அதிகாரம் கொண்ட ஒரு அரசு வடிவம் என வரைவிலக்கணம் கூறுகின்றனர். வேறு சிலரோ இதை, 'மக்களின் பொது நடத்தைகளையும், தனிப்பட்ட நடத்தைகளையும், ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் நெறிப்படுத்துகின்ற ஒரு அரசு' என்கின்றனர்.
English
Pertaining to a system in social organizations and administration characterized by the relative absence of democratic decision making and implementation processes and the requirement of submitting to higher-ranking members of the organization. Punishments or sanctions are often imposed on those members of the organization who do not comply, and rewards are given to those who do.